நால்வருக்கு வந்தனம்

நால்வருக்கு வந்தனம்

கோரிக்கை

அன்புள்ளம் கொண்ட ஆன்மீக சிவநேய செல்வர்களே,

எல்லாம் வல்ல எம்பெருமான் இந்த பரந்த விரிந்த பெரிய உலகினை படைத்து, காத்து, ரட்சித்து அன்பினால் மட்டுமே இயங்க வைப்பது நாம் அறிந்ததொரு செயலாகும்.

அப்படிப்பட்ட பெருமான் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பினும் திருக்கோவில் என்ற ஒரு இடத்தில் நாம் உய்வு பெற வீற்றிருந்தருள்வது நாம் அறிந்ததே. நம்மால் ஆலயங்களை கட்டிகாப்பது என்பது மிகமிக அரிய பெரிய செயலாகும். ஆகவே எல்லா சிவாலயங்களிலும் தினமும் ஒரு தீபமானது ஒரு வேளையாவது ஏற்றபடவேண்டும் என்ற பேரவாவினால் தூண்டப்பட்டு இந்த எண்ணெய் தரும் பணியை துவக்கி உளளோம்.

இந்த உயர்ந்த தொண்டானது ஏற்கெனவே நாயன்மார்களால் செய்யப்பட்டது தான். தொடர்ந்து வாரந்தோறும் தீபம் ஏற்றுதல், அதன் சிறப்பு, பயன்கள் பற்றி அருளாளர்கள் கூறும் நன்மொழிகள் இவ்விணையத்தில் இடம்பெறும் என அன்புடன் தெரிவத்து கொள்கின்றேன்.

இந்த சிறிய திருப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு சிவனடியார்கள்,நமக்கு தேவையான தகவல் எங்கெங்கு சிவாலயங்களில் விளக்கு ஏற்றஎண்ணெய் தேவைப்படுகின்றது என்பதும், அதற்கு நாம் எப்படி உதவினால் அங்கு செய்யமுடியும் என்பதும்; மேலும் இந்த
சிறிய பணி ஆங்காங்கே நடைபெற அனைவரின் ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு பணிவன்புடன் வணங்கி கேட்டுகொள்கிறோம்.தெரியப்படுத்தும்போது அந்தந்த ஊரை சொந்தவூறாக கொண்டவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களும் கைகோர்த்து இந்த உன்னதமான பணி செய்ய வாய்ப்பு கூடும்.

எனவே இதை காண கூடும் அனைவரும் தாங்கள் தங்களாலான உதவியை நேரடியாக நம்மூலம் அல்லது அவர்களே அவரவர்கள் ஊரில் செய்ய வேண்டிவிரும்பி பணிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

நமது வலயதளத்தில் விபரங்களை வெளியிடுவதன் மூலம் எல்லா கோவில்களுக்கும் ஒரு சிறந்த வழிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்பணியைத் தொடங்குகின்றோம். எல்லோரும் சேர்ந்துதான் தேர் இழுக்கவேண்டும், அதுதான் இறைவனுக்கு அழகு, நமக்கும் புண்ணியம். இப்பணியின் மூலம் நமக்கு அவனின் முழுமையான பலனை அவன் அருளாலேயே கொடுப்பானாக.

அனைவரும் கூடி அவன் தாள் வணங்கி சகல நலன்களையும் பெறுவோமாக.

எண்ணெய் தருபவர்கள் அப்படியே அருகாமையில் உள்ள சிவனடியார்களை தொடர்பு கொண்டு சிவாலயத்தில் தரலாம். பணமாக தர விரும்புவர் நாம் துவங்கியுள்ள கார்ப்பரேஷன் வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.

சென்னை தொலைபேசி: 9884126417

சிவாலயங்களில் தீபம் ஏற்றும் திருப்பணி

சிவாலயங்களில் தினந்தோறும் தீபம் ஏற்றிவழிபாடு செய்தல் மிகவும் உண்ணதமான் பணி மட்டுமன்றி இன்று நாம்படும் பலவித சொல்லமுடியாத இன்னல்களினின்றும் நம்மையும் இந்த வுலகையும் ரட்சிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

குறிப்பாக இந்த விளக்கிடும் செயல் பற்றி மிகவும் சாஸ்திர சம்ப்ரதாயம் அறிந்த அறிஞருடன் இதற்கென பிரதயேகமாக் சென்று உரையாடியபின் இந்த இணையதளத்தை இன்று நாம் உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.

அப்படிப் பேசி அறிந்ததொரு தகவல் விளக்கேற்ற குறிப்பாக,இலுப்பை எண்ணெய் (botanical name: Bassia Longifolia) மட்டுமே முக்கியமாக உபயோகப்படுத்தப்பட்டவரையில் அனைத்தும் சரியாக நடந்ததையும் பிறகு எரிபொருளான எண்ணெய் மாற மாற நாமும் நம்நிலையும் தற்போதிய சூழலில் தள்ளப்பட்டிருப்பதையும் அந்த மூதறிஞர் விளக்கினார்.

எனவே தற்போது ஆங்காங்கே நல்லண்ணை வாங்கிதரவும்,தொடர்ந்து முழு அளவில் .இலுப்பை எண்ணெய் தர நடவடிக்கை எடுப்பதென இக்குழு தீர்மானித்துள்ளது.

இதவரை நான்கு டின்கள்(சுமார் 80 கிலோ) வரை வாங்கி பல்வேறு சிவாலயங்களுக்கும் தந்துள்ளோம். இதை பார்க்கும் எல்லா அன்பர்களும் அவரவரது சொந்தவூரில் இருக்கும் சிவாலாய் தேவைகள் பற்றியும் வேறு எந்தவிதத்தில் தெரியபடுத்த வாய்ப்பு உள்ளபட்சத்தில் எங்களுக்கு சொன்னால் முடிந்த அளவு உள்ளுரிலேயே எண்ணெய், திரி எல்லாம் தர ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்து கொள்கின்றோம்.

என்றென்றும் அன்புடன்
சிவாலய பணியில்
சிவாய நமஹ

லைட்டிங் ஆப் சிவாலய குழவின் சார்பில்
91 988 412 6417

தீபத்தின் பயன்கள்

திருவண்ணாமலையில் ஐந்து தீபம் உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை "இறைவன் ஒருவனே!' என்று தத்துவங்கள் கூறுகின்றன. அந்த ஒருவனுக்கு பெயர் ஏதும் இல்லை. ஊரும் இல்லை. எங்கும் இறைவன் நிறைந்து விளங்குகிறான்.

இதனை வலியுறுத்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் முன்னிலையில் திருக்கார்த்திகையன்று அதிகாலை வேளையில் பெரிய கற்பூரக்கட்டியில் ஜோதியை ஏற்றி தீபாராதனை செய்வர். இத்தீபம் " பரணி தீபம்' என்று பெயர்பெறும். கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு முந்தைய பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவதால் இந்த தீபத்தை "பரணி தீபம்' என்கிறார்கள். பிறகு அந்த கற்பூரச்சுடரொளி ஒரு பெரிய ஒற்றைத் திரியில் பொருத்தப்பட்டு, நந்தீஸ்வரர் முன்னிலையில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் ஏற்றப்படும். ஒற்றை தீபம் ஒன்றாக இருக்கும் கடவுளையும், ஐந்து தீபங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களையும் அவர் மேற்கொள்ள பஞ்சமூர்த்திகளாகப் பிரிவதையும் காட்டும். இவர்கள் தங்கள் பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்கும் வகையில் அம்மன் சன்னதியில் ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.


கார்த்திகை விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் : ராவணனைக் கொன்ற பாவம் தீர வேதாரண்யம் கடலில் நீராடிய ராமபிரான், சிவபெருமானைப் பூஜித்ததால் இவ்வூர் "ஆதிசேது' எனப்பட்டது. இங்குள்ள சிவனை நான்கு வேதங்களும் வழிபட்டதால் "வேதாரண்யேஸ்வரர்' என்று அழைப்பர். வேதங்கள் சிவனை வணங்கிவிட்டு கோயில் கதவை மூடிவிட்டுக் கிளம்பின. அதன் பிறகு கதவு திறக்கப்படவில்லை. பிற்காலத்தில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் மூடவும் செய்து அற்புதம் நிகழ்த்தினர். இத்தலத்தில் எலி ஒன்றும் சிவனுக்கு சேவை செய்து சிவபுண்ணியம் தேடிக் கொண்டது. விளக்கில் இருக்கும் நெய்யினை உண்ணப் பாய்ந்து வந்தது எலி. ஆனால், எலியின் மூக்குபட்டு அணைய இருந்த தீபத்தின் சுடர் பிரகாசமானது. அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் நாம் செய்யும் சிவபுண்ணியத்திற்கு பலனுண்டு. ஒன்றும் அறியாத எலி செய்த இந்த அற்புத கைங்கர்யத்துக்காக, இறைவன் மலை நாட்டின் மன்னனாகும் பாக்கியம் தந்தார். மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறந்த அந்த எலி மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தையும் பெற்றது. அதனால், கார்த்திகை நாளில் ஏற்றும் தீபம் மிகவும் சிறப்பானது என்பதை உணர்வோம்.


ஆண்டுக்கொரு முறை பவனிவரும் அர்த்தநாரி : திருவண்ணமாலையில் திருக்கார்த்திகை அன்று மாலையில் ஏற்றப்படும் தீபம் கார்த்திகை தீபமாகும். தீபம் ஏற்றுவதற்கு முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் ஊர்வலமாக வருவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவரது பவனி நடப்பது குறிப்பிடத்தக்கது. அப்போது பஞ்சமூர்த்தி சன்னதிகளில் ஏற்றிய ஐந்து தீபங்கள், அம்மன்சன்னதியில் ஏற்றிய ஐந்து தீபங்களும் ஆக பத்து தீபங்களும் சுவாமியின் முன்னால் சுமந்து வரப்படும். கொடிமரத்திற்கு முன்புள்ள அகண்டத்தில் (தீச்சட்டி) இதை ஒன்று சேர்ப்பர். ஒன்றாக இருக்கும் தெய்வத்தால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அந்த தெய்வத்திடமே திரும்பவும் ஒடுங்கும் என்பதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படும்.


அப்போது மலையுச்சியில் கார்த்திகைஜோதியாக அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். அன்னை உமையவள் அண்ணாமலையில் தவம் செய்ததன் பயனாக சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதனால் சிவனும் சக்தியும் சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உண்டானது. அத்திருக்கோலம் தோன்றிய நேரமே கார்த்திகை மாத கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம். தீபமேற்றும் போது பாடும் பாடல்அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முருகப்பெருமானின் புகழ்பாடும் நூல்களில் சிறப்பானது. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். இறைவனே தீபச்சுடரொளியாக இருந்து நாம் வேண்டியவற்றை தந்து அருள் செய்கிறான். சாதாரணமாக ஓரிடத்தில் ஏற்றும் விளக்கு புறஇருளைப் போக்கும். ஆனால், திருவிளக்காக கோயிலிலோ அல்லது பூஜை அறையிலோ ஏற்றும் தீபம் நம் புற இருளுடன் மனஇருளையும் போக்கும் சக்தி கொண்டது. அதனால் தான் முருகனைப் போற்றும் அருணகிரிநாதர் பழநித்திருப்புகழில் "தீபமங்கள ஜோதீ நமோநம' என்று தீபச்சுடரை முருகப் பெருமானாகவே போற்றி வணங்குகிறார். அதனால் திருக்கார்த்திகை தீபமேற்றும்போது "


"தீபமங்கள ஜோதீ நமோநமதூய

அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்''

என்று பாடி தீபமேற்ற வேண்டும்.


2500 ஆண்டுகள் பழமையான கார்த்திகை திருவிழா : வட இந்தியாவில் தீபாவளியன்று வீடுகளில் விளக்கேற்றப்படுகிறது. ஆனால், தமிழ் மண்ணில் தீபவிழாவாக கார்த்திகைத் திருநாள் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் பவுர்ணமியன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் கார்த்திகை தீபவிழா நடைபெற்றாலும் நினைக்க முக்தி தரும் தலமாகிய திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக நடக்கிறது. ஞானசம்பந்தர் தேவாரப்பதிகத்தில் ""தொல் கார்த்திகைத் திருநாள்'' என்று இதுபற்றி குறிப்பிடுவதில் இருந்து இதன் பழமையை அறியலாம். அகநானூறு, நற்றிணை போன்ற மிகப்பழைய இலக்கியங்களும் கார்த்திகை விழாவின் சிறப்பைப் போற்றுகின்றன. சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிற இலக்கிய காலங்களை பார்க்கும் போது ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக இந்த விழா நடந்து வருவதை அறியலாம்.


பாட்டும் பொருளும்

கலியநாயனார்

முன்புதிரு விளக்கெரிக்கும்
முறையாமங் குறையாமல்
மென்புல்லும்
விளக்கெரிக்கப்
போதாமை மெய்யான
அன்புபுரி வார்அடுத்த
விளக்குத்தந்
திருமுடியை
என்புருக மடுத்தெரித்தார்
இருவினையின் தொடக்கெரித்தார்.


இறைவரின் திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப் படி தாம் கருதிய யாமங்களில் குறையாமல் விளக்கை எரிப்பதற்கு அப்புல் போதாமையால், மெய்ம்மை அன்பினால் திருத்தொண்டு செய்பவரான கலியநாயனார், அடுத்த விளக்காகத் தம் திருமுடியி னையே எலும்பும் கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்தார். அதனால் இருவினைகளான தொடக்கை எரிப்பவர் ஆனார்.

காரிநாயனார்

தாவாத பெருஞ்செல்வம்
தலைநின்ற பயன்இதுவென்
றோவாத
ஓளிவிளக்குச்

சிவன்கோயில் உள்ளெரித்து
நாவாரப் பரவுவார்
நல்குரவு வந்தெய்தத்
தேவாதி தேவர்பிரான்
திருத்தில்லை சென்றடைந்தார்.


பெருஞ் செல்வத்தால் பெறும் சிறந்த கெடாத பயன் இதுவே! எனும் உள்ளத்தராய், நீங்காது ஒளிதரும் விளக்குகளைச் சிவபெருமான் கோயிலுக்குள் ஏற்றி வைத்து, நாவாரப் போற்றுபவ ரான காரி்நாயனார், வறுமை வந்து அடையவே, அந்த வறுமையுடன் இங்கு இருத்தல் தகாது என்று எண்ணித், தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தில்லையைச் சென்று சேர்ந்தார்.

கணம்புலநாயனார்

தங்கள்பிரான் திருவுள்ளம்
செய்துதலைத்
திருவிளக்குப்
பொங்கியஅன் புடன்எரித்த
பொருவில்திருத் தொண்டருக்கு
மங்கலமாம் பெருங்கருணை
வைத்தருளச் சிவலோகத்
தெங்கள்பிரான் கணம்புல்லர்
இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.

இப்பணியைத் தம் இறைவர் திருவுள்ளத்தில் ஏற்றுத் திருவிளக்கை மிக்க அன்புடன் எரித்த ஒப்பில்லாத தொண்டருக்கு, இறைவனார் நன்மை பெருகும் பெருங்கருணையினை வைத்தருளச், சிவலோகத்தில் எங்கள் பெருமானாரான கணம்புல்ல நாயனார் சேர்ந்து இனிதாக வணங்கி அங்கு அமர்ந்தருளினார்.


மூரியார் கலியுலகில்
முடியிட்ட
திருவிளக்குப்
பேரியா றணிந்தாருக்
கெரித்தார்தங் கழல்பேணி
வேரியார் மலர்ச்சோலை
விளங்குதிருக் கடவூரில்
காரியார் தாஞ்செய்த
திருத்தொண்டு கட்டுரைப்பாம்
.


வலிமை பொருந்திய கடல் சூழ்ந்த உலகத்தில், தம்முடியையே திருமுன்பு இடும் விளக்காகக், கங்கை எனும் பேராற்றை அணிந்த சிவபெருமானுக்கு எரித்த கணம்புல்ல நாயனாரின் திருவடிகளைப் போற்றித், தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் `திருக்கடவூரில்' தோன்றி யருளிய `காரி நாயனார்' செய்த திருத்தொண்டினைச் சொல்வாம்.

திருவிளக்கு மகிமை

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

-- 10வது திருமுறை


எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.


திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.

எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.


தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.

பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.


மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார்.

NAMANANDHI ADIKAL - நமநந்தி அடிகள்

In the kingdom where the river kAvEri flows through beautifully was the town Emap pERUr. The town where the houses wear the mango leaves indicating good deeds, the fumes of vEdic rites that forms the clouds, the red lotuses in the pond that look like the flame in the rite with surrounding ghee offering, was heard echoing the knowledge of the vEdas. In the tradition of vEdic chanters who live in the unique shaivite discipline, came the ardent devotee of snake ornated Lord by name n^amin^an^dhi adikaL. He was like the fire that is grown with truth of the vEdas, firmly believed in the sacredness of Holy Ash, stood blissfully in holding up the feet of the Black-throated Lord who sings music.

He with a great eagerness to salute the Lord of thiruvArUr went there. He worshiped the only hold for the devotees the Lord who has the feathers decorated matted hair who has taken abode at the ant-hill. Very many days he spent saluting the the Supreme who smashed the three cities into heaps of ash. Then he went to serve the Lord at thearaneRi abode. With his heartful of love, mind full of mahEsha he prostrated many times the Lord and stood up in the interest of lighting the lamps thus serving the Kindling flame. By then the time was already evening, and he went to a nearby house to ask for some ghee for the lamps. The house he entered happened to be a house of a Jain. The people in the house mocked at him saying while the God Himself had the fire in His hand why unnecessarily he needed to put the light. No ghee was available if he wanted he could pour the water form the pond to light the lamps, they laughed in the ignorance of half shuttered realization. n^AyanAr felt bad, left to the temple and cried to the Lord.

There rose a voice ordering him to shed the sorrow and pour the pond water in the lamps and lit them. Praising the Lord who has the Sun, Moon and fire as the Three eyes, he brought the water from the pond and put it on the cotton plaited thread. With the world wondering, vengents whispering down, the White-Ash smeared Lord blessing, he lit the lamp that glowed till the dawn. He lit the complete sets of lamps the same way to illuminate the abode fantastically. While the absolute Source of energy is with, what other source could be hurdle ?! As he had the principle of worshiping the Lord shiva at his house everyday, he left the same night to his town and did the worship. The next morning he returned to the temple at thiruvArUr, did all the required services inside and outside the temple with the joy of working for the Greatest Master. In the evening he decorated in his way the abode of the Light with luminant lamps. This continued for many days. By then because of the great love and deed of dhandiyadigaL(1) Jains lost their faith and left the area. The shaivite discipline prospered. The king donated and organized many endowments for the service of the Lord.

The festival town of thiruvArUr geared up for celebrating the auspicious paN^guni uththiram(2). The Street Dancing Lord with the inseparable shakti on the victorious Bull came blessing all the way to thirumaNalai as part of the festivities. There the crowd that mingled with the chanting of the traditionless Lord's fame was without any caste and creed barriers. What barrier, caste, creed, age, sex, race, language or any form of life, could be there while thepashupati is there to salvage every creature. Along with them our n^AyanAr praised the God of nature. He returned home and was sleeping in the darkness of night on the outside corridor of the house. His wife came out and enquired why he did not do the Lord's worship by growing fire that night and skipped the food. When he was in the festival crowd everybody was present so the impurity followed him, he replied. He further asked his wife to bring water to bathe and then start the pUja. As she left, by the wish of God or by tiredness who knows, he slept immediately. The Lord came as if He comes to the pUja, and enlightened him that those who were born in the thiruvArUr belong to His squad. The devotee woke up shivering and with realization. He felt bad for not doing the night worship of the Ultimate Source. Did the worship, told the wife the happenings and rushed to thiruvArUr in the wake of dawn. As he entered thiruvArUr he saw everybody living there to have the form of the Stain-throated Gold like bodied God. He, fearful, fell down on the ground saluted them and rejoiced.

He saw the scene changed again with people back in their normal form. He begged for excuse from the Lord who showers the grace, who shines in everything. He lived doing a great splendid service to the God. He served the devotees of the Ash smeared Lord with many needful things with a rising fame and got praised in the thEvAram ofthirun^Avukkarachu n^AyanAr(3). His service to the Lord, to His truthful slaves continued as he was praised by the sage of service. With the world praising his service he entered the luminance of the shade of the Lord of thiruvArUR. Let the thirst to serve the hara in spite of the non-conducive circumstances stay in the mind.

நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதியாகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாஞ் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க் காணியெனும்
பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.

KALIYANAAYANAAR - கலியநாயனார்

The Lord of sacrifices sits and blesses in the sea surrounded splendid town thiruvoRRiyUr. The sea roars like the relentless devotee chanting praNavam. The tides trying to touch the feet of the Lord and the wind like a good friend taking those waterlets to the ultimate feet of the Lord in His abode, the betel nut trees moving their heads enjoying this - the land's beauty wore as crown the abode of the Lord of devotees. That land of the Lord of art was fertile for art and craft.

In that place of the Lord who enjoys the anointing by the devotees, was a street by name chakkarap pAdi street full of oil making professionals. Born there was the great devotee kaliya n^AyanAr as the boon of the austerities of those people. The great austerity of serving the Lord, who is meditated by the supreme vedas as the kindling divine light, without any self projecting in the divine work he used to illuminate the thiruvoRRiyUr abode of that three light sourcing eyed Lord who kindles thoughts of Truth in the devotees hearts. Like the way he had illuminated the temple of that Lord shiva in his heart with glorious characteristics, he lit the lamps in and out all around that temple in a splendid way. Like the bliss he had in his heart the lamps beamed the light everyday in the temple. The Lord who appeared as the pillar of flame to brahmA and vishNu resided in that temple enjoying the service that asked for nothing but delighted in beautifying the Lord's place.

Like the good and bad deeds and their effects his wealth also diminished on the earth. So what ? His pleasure and inclination in serving did not drop down even a bit! Unperturbed of his material status he kept his heart in the Glorious two feet of the Lord of greats which are the ideal wealth the devotees would yearn for. He worked for others of his profession, not bothering about the status, got the wages to continue without break his wonderful service. When even the rich refused to give him work and wages, not at all shaken in his determination to enjoy in Its service, the great devotee who was affluent once, worked in oil churning wheel and using the oil and oil-taken-seed he got for the work, he bought oil for the Lord and did his brilliant service, becoming a beacon beaming the sincere love for the Lord. With the number of people who do that job also grown he did not get enough work. Sold all his properties to persist in serving. With nothing else left in the extremity of devotion went to sell his beloved wife. Nobody was ready to buy.

The devotee who never allowed anything to interrupt his illuminating service was highly concerned about that days situation of not getting oil for worship. The Lord for Himself does not require any lighting or food, but the devotee with a love that is more than that of a mother who feed and take care of the child, feels for it when the service gets disturbed by external situations. This is this great selfless love that makes the Lord enjoy the offerings. The devotion that was pure made the n^AyanAr decide that come whatever be the lamps should be lit that day. He went inside the temple ofthiruvoRRiyUr with a decision. In place of oil he wanted to out his own blood ! He started cutting his throat. The Blue throated Lord seeing his extremeness in the determination to serve without break, caught his hands and stopped him. The Lord appeared with His consort on the Holy Bull in the horizon amidst the praise by the great people whose heart is nothing but He Himself. The devotee free from the wound flooded his eyes with tears of love. The Lord freed him from the bond of birth too and gave him the place in His abode - the place of brightness. Let the glorious service of kaliya n^Ayanar stay in the mind.

செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ்ஹ மிகவுழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழில் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கட்டார

Monday, January 4, 2010


3 comments:

Sankarasubramanian S said...

I have no words to convey my thankfulness to the man/team behind this NOBLEST initiative. I am sure this will go a long way in reviving spiritualism all over the world.
Thank you once again.
Mani

Unknown said...

http://shrikalyanapurishwararaalayam.blogspot.in/

Unknown said...

We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
WhatsApp +91 7795833215